முழுவதுமாக குணமாகிய கமல் – உலக நாயகன் இப்ப எங்க இருக்கிறார் தெரியுமா.? உற்சாகத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்.

kamal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பல சின்னத்திரை நடிகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார்களாம்.

மேலும் இவர் சின்னத்திரை தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி தற்போது ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் இவர் கதர் ஆடை நிறுவனம் ஒன்று நிறுவ உள்ளார்.

அதற்காக இவர் அமெரிக்கா சென்று திரும்பும்போது அவருக்கு லேசான இருமல் இருந்ததாம் அதனால் இவர் மருத்துவமனையை அணுகியபோது அவருக்கு கொரோனா தொற்று உள்ளது என தெரியவந்துள்ளது அதனை அடுத்து இவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனால் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கூட சென்ற வாரம் கமலஹாசனிற்கும் பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கமலஹாசன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைய பிராத்தனை செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று முழுமையாக குணமாகி மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளாராம். மேலும் அவருக்கு கொரோனா குணமடைந்ததை மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கமலஹாசன் தற்போது முழுமையாக குணமாகி உள்ளார். மேலும் அவர் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என தெரிவித்து உள்ளனர்.

kamal
kamal