தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறுத்த கோரி புகார் அளித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.! பின்னணி தகவல் இதோ..

dhanush
dhanush

தனுஷ் நடிப்பில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்பொழுது கேப்டன் மில்லர் படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வனப்பகுதியில் சமீப காலங்களாக நடைபெற்று வந்தது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படுமா என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ராக்கி, சாணி காகிதம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது இப்படிப்பட்ட நிலையில் அங்கு படபிடிப்பு நடத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் ஷூட்டிங் நடத்தப்படுவதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் படப்பிடிப்பை அங்கு நடத்த தடைவிதிக்குமாறும் கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரில் அதிக வெளிச்சம் கொண்ட லைட்டுகள் பயன்படுத்துவதனாலும், அதேபோல் வெடிகுண்டுகள் அதிக சத்தத்துடன் வெடிப்பதனாலும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செங்குளம் கால்வாயின் குறுக்கே மரம் பாலம் ஒன்றை படத்திற்காக வைத்திருக்கும் போது அந்த கால்வாய் சேதம் அடைந்துள்ளதாகவும் அதனால் அங்கிருந்து குளங்கள் நீர் இல்லாமல் வறண்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அந்த புது காரில் தெரிவித்துள்ளார். இவ்வாறு புகார் கொடுத்த பிறகும் கூட தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றீர்களா என கேட்டால் மேல் இடத்தில் இருந்து அனுமதி வாங்கி விட்டதாக பட குழுவினர்கள் கூறியதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் வனத்துறைக்கு தொடர்ந்து புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.