இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் “அக நக” பாடல் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் பொன்னின் செல்வன் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு உரிமையை வாங்க எந்த ஒரு நிறுவனமும் தயாராக இல்லை என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது பொன்னின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தாலும் தெலுங்கு மற்றும் கர்நாடக பகுதிகளில் பெரிய அளவில் பேசப்படவில்லை அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் அங்கு சரியாக ஓடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தெலுங்கு பகுதிகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிட்டு உரிமையை கைப்பற்ற எந்த ஒரு நிறுவனமும் வரவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த முறை வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தினால் எதிர்பார்த்த அளவு வசூல் பெறாததால் இந்த முறை இந்த படத்தை வாங்க பலரும் யோசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி மேல் வசூலித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இரண்டாவது பாகத்தை வாங்க முன்வராததால் இந்த முறை வசூலில் அடி வாங்கும் எனவும் கூறப்படுகிறது.