ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்றுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் விறுவிறுப்பாக மோதிக்கொண்டன.
இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நேற்றைய போட்டியில் கிரிக்கெட் கமென்ட் செய்த வர்ணனையாளர் அஜித்தின் படம் பற்றி மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
அப்பொழுது கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல் விக்கெட்டை ஐதராபாத் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத் விழுதினார் இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியை தமிழில் கமெண்ட் செய்து கொண்டிருந்த நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி ரசல் அவர் விக்கெட் குறித்து வீரமாக விளையாட நினைத்து விவேகம் இல்லாமல் விளையாடி அவுட் ஆகி விட்டார்கள் ரசல் எனக் கூறினார்.
அருகிலிருந்த மற்றொரு கமெண்ட் மேன் விசுவாசமாக இருங்கள் என கூற அதற்கு இன்னொரு வர்ணனையாளர் வலிமை அப்டேட் கொடுங்கள் என கேட்டுள்ளார் அதற்கு உடனே அங்கிருந்த பலரும் சிரிக்க அந்த இடமே சிரிப்பு மழையாக மாறியது.
ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளர் ஆர் ஜே பாலாஜி வீரம், விவேகம், விசுவாசம் வலிமை என அஜித் படத்தை அடுத்தடுத்து கூறி பேசியது ரசிகர்களுடைய பாராட்டை பெற்று வருகிறது.