பாவ கதை திரைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் கூறிய கருத்து.! வைரலாகும் தகவல்.!

vijay

வெள்ளித்திரையில் நான்கு இயக்குனர்களை கொண்டு இயக்கி வெளியான திரைப்படம் தான் பாவ கதைகள் இந்த திரைப்படத்தை கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் என நான்கு இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள்.

அதில் நான்கு பகுதிகளாக தங்கம், ஒரு இரவு, வான் மகள், லவ் பண்ண விட்டுரனும் என நான்கு பகுதிகளாக பாவ கதைகள் உருவாகி உள்ளது.

இதில் சுதா கொங்கரா இயக்கிய பகுதிதான் தங்கம் இதில் சாந்தனு, காளிதாஸ் மற்றும் ஜீவி பவானி ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள் இவர்களது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அதேபோல் பாவ கதைகள் திரைப்படத்தை இளையதளபதி விஜய் பார்த்திருக்கிறார் இந்த படத்தை பார்த்துவிட்டு சாந்தனு விற்கு போன் செய்துள்ளாராம் தளபதி விஜய் அதில் சாந்தனு விடம் படம் ரொம்ப நல்லா இருக்கு என்னய்யா இப்படி நடித்திருக்க இதுதான் புதிய சாந்தனு வா என விஜய் கூறினாராம்.

விஜயை போனில் பேசிய மாறியே காளிதாஸ் விஜய் குரலில் மிமிக்கிரி செய்து அசத்தியுள்ளார். அதற்கான வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ காணொளி.