தளபதியின் பீஸ்ட் தலைப்புக்கு வந்த சோதனை..! கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வச்சா என்ன பண்றது..?

vijay-1
vijay-1

சமீபத்தில் தளபதி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டடித்த திரைப்படம்தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் நெல்சன்  என்பவர் இயக்கத்தில் தளபதி விஜய் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் மனோஜ் அவர்கள்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்நிலையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக உருவாக்குவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகின எனவே இந்த திரைப்படத்தின் தலைப்பை வைத்து பல்வேறு தரப்பினர்களும் விமர்சனம் செய்தார்கள்.

அந்தவகையில் பிரபல தமிழ் நடிகராக இருந்து கொண்டு இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதா என பலரும் விஜய்யை கிண்டலடித்ததுமட்டுமல்லாமல் இதன் காரணமாக படக்குழுவினர்கள் தலைப்பை மாற்றி விடலாமா என்று கூட யோசித்தார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் தமிழ் திரைப்படங்களுக்கான 8 சதவீத வரி தள்ளுபடி செய்யவுள்ளதாக  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இந்த சலுகை தமிழில் தலைப்பு வைத்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறியுள்ளார்கள்.

peast 2
peast 2

இதனால் பட குழுவினர்கள் தற்போது நமது தலைப்பை தமிழில் மாற்றி விடலாமா என யோசித்து வருகிறார்களாம். இவங்க பண்றத பார்த்தா இனிமே ஹீரோவ கூட மாத்திடுவாங்க போல என நெட்டிசன்கள் பலர் கிண்டல் அடித்து வருகிறார்கள்.