தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாபெரும் நடிகராக பிரதிபலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் விடிவி கணேஷ் யோகி பாபு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பது இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த பிரமாண்டமான திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் நீ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா டெல்லி சென்னை ஆகிய இடங்களில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் படப்பிடிப்பின் போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி தளபதி விஜய் நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெருமளவு சந்தோஷப்படுத்தி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது என ஒளிப்பதிவாளர் மனோஜ் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் ரேட் நிறுவனத்தின் புதிய வகையான ரெட் ரெப்டர் என்ற கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒளிப்பதிவாளர் மனோஜ் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற கேமரா வகைகள் அஜித்தின் பில்லா 2 மற்றும் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் இந்த புதிய வகை கேமரா இதுவரை இந்தியாவில் எந்தவொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்படவில்லை மேலும் இந்த கேமராவின் சிறப்பம்சம் என்னவென்றால் slow-motion வீடியோவை கூட மிகத் துல்லியமாக 8k வகையில் எடுக்கலாம்.