தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ஆம் தேதி வெளியாக உள்ளது என சமீபத்தில்தான் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டிருந்தார்கள்.
இதனையடுத்து படம் திரையரங்குகளில் வெளியானால் அதில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டதால் விஜய் தனது ரசிகர்கள் 100 சதவீத இருக்கைகள் உடன் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சமீபத்தில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியும்.
இந்நிலையில் விஜய் முதலமைச்சர் பழனிசாமி இடம் இந்த படத்திற்காக மட்டும் கோரிக்கை வைக்காமல் இன்னொரு கோரிக்கையும் வைத்துள்ளாராம் என்று புதிதாக ஒரு தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது
அதில் மாஸ்டர் திரைப்படத்திற்காக மட்டுமே என்னை நேரில் வந்து சந்திக்கவில்லை எனது படம் போல் பல திரைப்படங்கள் தற்போது வரை வெளியாக முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது அதையும் நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என விஜய் முதலமைச்சரிடம் கூறியதாக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.