உலகில் டாப் நடிகர்களாக பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அசாதாரணமான திறமை வெளிபடுத்து வழக்கம்.ம் அந்தவகையில் ரஜினிக்கு எப்படி ஸ்டைல் அதுபோல தனுஷுக்கு நடிப்பு அதுபோல விஜய்க்கு நடனம் என ஒவ்வொருவருக்கும் ஒரு அசாதாரண திறமை இருக்கும் அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருவார்கள்.
அந்த வகையில் ரஜினியை தொடர்ந்து அசாதாரணமான நடனத்தை வெளிப்படுத்தியும் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்ததால் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் வசூலிலும் வாரி குவித்ததால் யாரும் எதிர்பார்க்காத இடத்திற்கு முன்னேறினார்.
தற்போது விஜய்யை அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடிக்க இருக்கிறார் அந்த வகையில் 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குனர்களை தற்போது செலக்ட் செய்து உள்ளார்.
இந்த நிலையில் 2011ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான வேலாயுதம் திரைப்படத்தை மோகன் ராஜா என்பவர் இயக்கி வந்தார் இவரது தம்பி தான் ஜெயம் ரவி என்பது குறிப்பிடத்தக்கது வேலாயுதம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் திடீர் விசிட் அடித்தார் ஜெயம் ரவி அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
அந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் கேரவன்னில் கூட உட்காராமல் சாதாரண ஸ்டூலில் தளபதி விஜய், ஜெயம்ரவி, மோகன்ராஜா ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.