ஷூட்டிங் முடிந்த கையோடு தளபதி விஜய் செய்த செயல்..! கண்ணீருடன் பகிர்ந்த தாடி பாலாஜி..!

vijay-1
vijay-1

சமீபத்தில் தாடி பாலாஜி தனது மனைவியுடன் விவாகரத்து ஆன விஷயம் சமூகவலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இவ்வாறு நமது தாடி பாலாஜி விஜய் டிவி மூலமாக பிரபலமானவர்.  அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2 பாலாஜி தன்னுடைய மனைவியுடன் இணைந்து பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் மற்றும் கலக்கப்போவது யாரு நிஷா உடன் பங்கேற்றுள்ளார். இவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் தன்னுடைய காமெடி நடனத்தை ஆடி ரசிகர்களை கவர்வது மட்டுமல்லாமல்  கில்லி பட பாடலுக்கு மிக அற்புதமாக நடனமாடியுள்ளார்.

அப்போது இவர் தான் தளபதியுடன் நடித்த அனுபவத்தையும் மிக சிறப்பாக பகிர்ந்துள்ளார். அந்தவகையில் தனக்கு கிடைத்த மிகப் பெரிய கிப்ட் என்னவென்றால்  தளபதி விஜயின் நட்பு தான் இவருடன் நான் 8 வருடங்கள் பணியாற்றி உள்ளேன்.

அந்தவகையில் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்ற பழமொழிக்கு ஏற்ப படப்பிடிப்பில் இருந்தபோது என் முகத்தைப் பார்த்து நான் என்ன சோகத்தில் இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டார் அந்த வகையில் தன்னுடைய  தந்தையார் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தார்.

இதன் காரணமாக படப்பிடிப்பு முடிந்த கையோடு மருத்துவமனைக்கு சென்று என்னுடைய தந்தைக்கு மருத்துவ செலவிற்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு வந்தார் இதனை தற்போது தாடி பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

balaji-1
balaji-1