டெல்லியில் மாஸ் காட்டிய தளபதி விஜய்.! பிரபல mall – லை சுற்றி பார்த்த போது எடுத்த வீடியோ.! இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

vijay

திரையுலகில் வெற்றி கண்டு வரும் முன்னணி நடிகர்கள் பலரும் சிறப்பம்சம் உள்ள இயக்குனர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து தன்னை மென்மேலும் வளர்த்துக் கொண்டே போவார்கள் ஆனால் இதிலிருந்து மாறுபட்டவர்கள் உள்ளவர்தான் தளபதி விஜய். சமிப காலமாக இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கிறார்.

அந்த வகையில் பல இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் தற்போது சிறப்பான வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். விஜய் தற்போது ஒரு புதிய இயக்குனருடன் கைகோர்த்து பயணிக்கிறார் அந்தவகையில் விஜய் நெல்சன் திலிப்குமார் உடன் முதல்முறையாக கைகோர்த்து “பிஸ்ட்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரியவருகிறது. ஆனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு வில்லன்களை தட்டி தூக்கி வருகின்றனர் அந்த வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த சபீர் மற்றும் தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை கொடுத்து வந்த இயக்குனர் செல்வராகவனும் தற்போது இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் வெளி நாடுகளில் எடுக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது மாறி மாறி சென்னை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷூட்டிங் ரஷ்யாவில் நடக்க இருக்கின்றன என்ற தகவலும் வெளியாகி உள்ளது. டெல்லியில் சமீபத்தில் படக்குழு படப்பிடிப்பு முடிந்தது.

இதற்காக விஜய் டெல்லி சென்ற போதும் வந்த பொழுதும் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போதும் விஜயை பற்றி சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டெல்லியில் படப்பிடிப்பின் போது அங்கு உள்ள பிரபல மால் ஒன்றில் நடிகர் விஜய் சுற்றித்திரியும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.