தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தயங்காமல் ஏற்று நடித்து அதில் வெற்றி கண்டவர் தான் நடிகர் விக்ரம். சினிமாவுலகில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்தாலும் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் வெற்றியை ருசிக்காமல் இருந்தன.
இதை நன்கு உணர்ந்து கொண்ட நடிகர் விக்ரம் வித்தியாசமான அதே சமயம் தனது திறமையை வெளிப்படுத்தும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன முதலாவதாக மகான் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை.
என்றாலும் OTT தளத்தில் வெளியாகி நல்ல வெற்றியை ருசித்து வருகிறது. மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் வேற ஒரு லெவலில் எடுத்துள்ளார் மேலும் கதைக்கு ஏற்றவாறு நடிகர் விக்ரமும் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார். மற்ற நடிகர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து அசத்தி உள்ளனர் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனத், ஆடுகளம் நரேன், பேட்டை முத்துக்குமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தியுள்ளனர்.
இந்த படத்தை பலர் பார்த்துவிட்டு புகழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் திரைஉலகில் வெற்றியைக் கண்டு வரும் டாப் நடிகர்கள் பலரும் இந்த படம் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் முதலாவதாக ரஜினி அண்மையில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு போன் செய்து வாழ்த்தினார்.
மேலும் நடிகர் விஜய் படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்ததாக தயாரிப்பாளர்களிடம் சொல்லி உள்ளார் அதனை கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இச்செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டு தற்போது தீயாய் பரவி வருகிறது. மகான் திரைப்படத்தைப் பார்த்த பலரும் நல்ல கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த படத்திற்கு நல்லதொரு வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.