பிரபல தயாரிப்பாளரை ஒரே திரைப்படத்தால் நடுத் தெருவில் நிற்க வைத்த தளபதி விஜய்..! அட இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விஜய்யை வைத்து பல்வேறு பெரிய பெரிய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது மிகுந்த கஷ்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது பணத்துக்காக திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் கூட அவர் நடிக்க ஆரம்பித்து விட்டாராம்.

தற்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவர் பல்வேறு பழைய திரைப்படங்களில் மாபெரும் வில்லனாக மிரட்டி உள்ளார்.  அந்த வகையில் பாசில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படமாகும் இந்த திரைப்படத்தின் மூலம் தான் விஜய் ஒரு ஹீரோவாக மதிக்கப்பட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்பை பெற்ற நடிகர் விஜய்யின் இந்த திரைப்படத்தை சங்கிலி முருகன் என்பவர் தயாரித்துள்ளார்.  இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளர் விஜய்யை வைத்து சுறா என்ற திரைப்படத்தை தயாரித்து இருப்பார் இந்த திரைப்படம் ஆனால் மாபெரும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுறா திரைப்படத்தில் இருந்து எழுந்திருக்க முடியாமல் சங்கிலி முருகன் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்காமல் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காத்திருந்து மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைபடத்தை தயாரித்து இருந்தார் அந்த திரைப்படமும் பெருமளவு வெற்றியை கொடுக்கவில்லை என்பதே உண்மை இதனால் நமது தயாரிப்பாளர் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் அவர் நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இனிமேல் யாரிடமும் பணம் கடன் வாங்கக்கூடாது என்ற காரணத்தினால் தான் இப்படி ஒரு முடிவை நமது தயாரிப்பாளர் எடுத்துள்ளாராம்.