சினிமா உலகில் மிகப்பெரிய நடிகர்களின் படங்களை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் தமிழில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை..
தொடர்ந்து அடுத்ததாக இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் முதல்முறையாக கைகோர்த்து பீஸ்ட் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் விருவிருப்பாக முடிந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த படத்தில் விஜய் உடன் கை கோர்த்தது பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் முதல் சிங்கிள் அரபிக் கூத்து பாடல் பற்றிய ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்து.
நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது அரபு குத்து பாடல் லிரிக்ஸ் நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் தளபதி விஜய்க்கு அதிகம் பிடித்துப்போகவே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சினிமா உலகை பொறுத்தவரை நடிகர் விஜயின் படங்களில் இருக்கும் பெரும்பாலான பாடல்கள் வெற்றியை ருசித்து உள்ளது அதுபோல பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடலும் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் என கூறப்படுகிறது ஏனென்றால் தளபதி விஜய்க்கு ரொம்ப பிடித்து உள்ளதால் நிச்சயம் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.