மேனேஜரை நம்பி படத்தில் நடித்த தளபதி விஜய் – கடைசி நேரத்தில் காலை வாரியத்தால் பல கோடி நஷ்டமாம்.!

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். சினிமா உலகின் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் ஒரு கட்டத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு தோல்விப் படங்களையும் கொடுத்து ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி உள்ளார் விஜய்.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் புலி. இந்தப் படம் அந்த காலத்து அரசர் படம் போலாகி எடுத்திருந்தனர் அதேசமயம் இந்தப் படத்தில் மாயாஜாலம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் இருந்ததால் குழந்தைகளையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக இந்த திரைப்படம் கவர்ந்து இழுத்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் நன்றாக ஓடவில்லை என்பது தான் உண்மை. சொல்லப்போனால் புலி திரைப்படம் விஜய் கேரியரிலில் தோல்வி படமாக அமைந்தது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து. இத்திரைப்படத்தின் விஜய்யின் மேனேஜர் செல்வகுமார் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

முதலில் புலி திரைப்படத்தை அவர் தயாரித்த இருந்தாலும் கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய போதிய பணம் இல்லாததால் திக்குமுக்காடி உள்ளார் இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் போய்விடும் என்ற சூழ் நிலைக்கு தள்ளியது இதை கடைசி கட்டத்தில் உணர்ந்த தளபதி விஜய் சொன்ன தேதியில் படத்தை ரிலிஸ் செய்ய வேறு வழியின்றி மீதி பணத்தை போட்டு படத்தை ரீலீஸ் செய்ய உதவினார் விஜய்.

புலி படம் வந்து போட்ட பணத்தை எடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தால் சில கோடிகள் விஜய்க்கு நஷ்டம் ஆக்கியதாக கூறப்படுகிறது அதன் காரணமாக மேனேஜர் செல்வகுமாரை பதவியிலிருந்து தூக்கி விட்டு அவரது சகவாசத்தை ஓரம் கட்டி வைத்து விட்டாராம் விஜய்.