தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு நடிகர்களும் தான் நடிக்கும் திரைப்படத்திற்கு ஏற்றவாறு தங்களுடைய பெயரை மாற்றிக்கொண்டு திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தன்னுடைய சொந்தப் பெயரைக் கொண்டு திரைப்படத்தில் நடித்துள்ள தளபதி விஜயின் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
நாளைய தீர்ப்பு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் நாளைய தீர்ப்பு இத்திரைப்படத்தில் விஜய், கீர்த்தனா, ராதாரவி, சரத்பாபு, போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தில் தளபதி விஜய் தன்னுடைய பெயரை விஜய் என்று வைத்து நடித்துள்ளார்.
செந்தூர பாண்டி இத்திரைப்படத்தை சந்திரசேகர் அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யுவராணி ,மனோரமா போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திலும் தளபதி விஜய்யின் பெயர் விஜய் என வைக்கப்பட்டிருந்தது.
ஒன்ஸ்மோர் திரைப்படம் இதுவும் சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன், சரோஜாதேவி, விஜய் ,சிம்ரன் என பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார் இதிலும் நமது தளபதிதன்னுடைய சொந்தப் பெயரில் நடித்து இருந்தார்.
வசந்தவாசல் இந்த திரைப்படத்தில் விஜய், சுவாதி, மன்சூரலிகான், வடிவேலு கோவை சரளா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்த இத்திரைப்படம் அதிரடி காதல் திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படத்தில் தளபதிவிஜய் திரைப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று வெறித்தனமாக இருப்பது இத்திரைப்படத்தின் கதை.
நேருக்கு நேர் இத்திரைப்படத்தை இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கியிருந்தார் இத்திரைப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா, ரகுவரன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார்கள் மேலும் இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தங்களுடைய சொந்த பெயரிலேயே நடித்திருந்தார்கள்.
பிரியமானவளே செல்வபாரதி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் விஜய் சிம்ரன் எஸ் பி பாலசுப்ரமணியம் விவேக் வையாபுரி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அக்ரிமெண்ட் திருமணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
தெறி கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கிய இத்திரைப்படம் மனது மாபெரும் வெற்றி கண்டது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா எமி ஜாக்சன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் இத்திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.