“போக்கிரி” படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கும் தளபதி விஜய் – ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய வீடியோ.

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் சூப்பர் ஹிட் படங்களாகவே இருந்து வருகின்றன அதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.

அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது இளம் இயக்குனர் நெல்சன்னுடன் கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது படக்குழு போஸ்ட் பிரமோஷன் வேலைகளை நோக்கி நகர்ந்துள்ளது படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்படும் போது வழக்கம் அந்த வகையில் விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான படம் போக்கிரி இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படம்.

இந்த படத்தில் தளபதி விஜய் காதல், ஆக்ஷன் போன்றவற்றில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இந்த படம் இப்பொழுதுகூட ரசிகர்களுக்கு ஃபேவரட்டான படமாக இருந்து வருகிறது இந்த திரைப் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது விஜய் ஒரு ஓரமாக உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மிக எளிமையாக ஒரு சேரில் உட்கார்ந்து அவர் ரெஸ்ட் எடுக்கும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.