தளபதி விஜயை பார்த்து சுத்தமா நடிக்கவே தெரியாது என்று சொன்ன.. பிக்பாஸ் 5 பிரபலம்.? வைரல்லாகும் வீடியோ.

vijay-and-bigboss
vijay-and-bigboss

தமிழ் சினிமாவில் டாப் நடிகரான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜயின் இளம் வயது நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீகாந்த், மனோ மூவரும் இணைந்து  விஜய் குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ளனர். ஆம் இந்த நிலையில் விஜய் நெருங்கிய நண்பனான சஞ்சீவ் சின்னத்திரை நாயகனாக பிரபலமடைந்து.

மேலும் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் சஞ்சீவ் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர். மேலும் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது விஜய் சஞ்சீவ் மனைவிக்கு கால் செய்து நலம் விசாரித்தார்.

அந்த அளவிற்கு தற்பொழுதும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி  ஒன்றில் விஜய் குறித்து விஜய் நண்பர்கள் பேசியிருந்தனர். ஆம் அதில் சஞ்சீவ் விஜய் சினிமாவில் சிறப்பாக நடித்து வந்தாலும்..

நிஜத்தில் அவருக்கு நடிக்கவே தெரியாது எப்போதும் எங்களிடம் உண்மையாகவே இருப்பார். எங்கள் கூடவே இருந்தாலும் அவர் வேலையில் கரெக்டாக இருப்பார் எனவும் விஜய் பற்றி பெருமையாக விஜய் நண்பர்கள் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ.