எனக்கும் அந்த மாதிரி ஆசை இருக்கு ஆனால் விட மாட்டேங்குறாங்களே..! லோகேஷிடம் புலம்பிய தளபதி விஜய்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து வருவது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர் பெருமக்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அந்தவகையில் தளபதி விஜயின் திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்தால் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவது வழக்கமான செயல்தான்.  இப்படி பிரபலமான நமது நடிகர் விஜய்க்கு ஒரு ஆசை இருக்கிறது தற்போது தெரியவந்துள்ளது ஆனால் அந்த ஆசை அப்போது தான் நிறைவேறும் என்பதுதான் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

இதுபற்றி மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பின்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இடம் அவருடைய ஆசையை கூறியுள்ளாராம்.  அப்பொழுது அவர் கூறியது என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆசை ஆனால் அதுபோல் என்னால் நடிக்க முடியவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திடீரென அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடியாது. அதே நிலையில்தான் மாஸ்டர் திரைப்படமும் உருவானது இந்த திரைப்படத்தில் பாதி என்னுடைய சாயலில் உருவானது அதேபோல மற்றொரு பக்கம் விஜய்க்கு ஆதரவாக இந்த திரைப்படத்தின் கதை மாற்றி அமைக்கப்பட்டது என கூறியுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த தகவலின்படி தளபதி 66 திரைப்படத்தில் எதிர்பார்ப்பை விட 67 திரைப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.