பீஸ்ட் திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக மிரட்டும் தளபதி விஜய்..! இணையத்தில் லீக் ஆன சுவாரஸ்யமான தகவல்கள்..!

peast-2

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மூலமாக மாபெரும் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்போது தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்  மாபெரும் வெற்றி கொண்டதன் காரணமாக தளபதியின் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு மீதமுள்ள காட்சி  சென்னையில் எடுக்க திட்டம் உள்ளதாக படக்குழுவினர்கள் கூறி உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள் வெளியாகியுள்ளது அதாவது காஷ்மீரில் தற்போது சூட்டிங் எடுக்க முடியாததன் காரணமாக  ஜார்ஜியாவில் காஷ்மீர் போல செட் அமைத்து ராணுவ தொடர்பான காட்சிகளை எடுத்து உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார் என்பது மட்டுமின்றி தீவிரவாதிகளுடன் மோதும் விஜய் படத்தின் ஆரம்பத்திலிருந்து சாதாரண மனிதராக இருப்பது போல் காண்பித்து கடைசியில் இராணுவ வீரராக  காட்டப்படுவது இந்த திரைப்படத்தின் கதையாகும்.

அந்தவகையில் இந்த திரைப்படமானது துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் போல்தான் இருக்கும் என ரசிகர்கள் குறை இருந்தாலும் தளபதி ரசிகர்களின்  தங்களுடைய வெறியை தியேட்டர்களில் தான் தீர்த்துக் கொள்வார்கள்.

peast-1
peast-1peast-1

மேலும் இத்திரைப்படத்தின் டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் வருகின்ற ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.