தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் சூப்பர் ஹிட் அடிப்பதால் இவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறார்.
கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வரும் திரைப்படம் “டாக்டர்” இந்த திரைப்படம் இதுவரை 100 கோடிக்கு மேல் தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது மேலும் தமிழகத்தை தாண்டி மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் மற்ற மொழிகளிலும் தலைகாட்டத் தொடங்கி உள்ளது. டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா மோகன், அர்ச்சனா, தீபா, ரெடின், யோகி பாபு, வினய் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
கடந்த தீபாவளி அன்று சன் டிவி தொலைக்காட்சியிலும் டாக்டர் திரைப்படம் போடப்பட்டது. இப்படி இருக்கின்ற நிலையில் டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய காட்சியில் தளபதி விஜய் ரசிகர்கள் ஒரு எடிட்டிங் செய்து யோகிபாபு பதிலாக தளபதி விஜய்யை செம்ம மாஸாக உட்கார வைத்து இருக்கும் படி எடிட் செய்த அழகிய fan made போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அழகிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்புவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த புகைப்படத்தில் விஜய் கெத்தாக உட்கார்ந்து இருக்கும் காட்சி. வைரல் புகைப்படம் இதோ.