ஷூட்டிங் முடிந்த கையோடு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடன் பீஸ்ட் பட லுக்கில் தளபதி விஜய்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

vijay-3

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் நெல்சன் திலீப் குமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட் களையும் படக்குழுவினர்கள் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் மாலில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதில் தளபதி விஜய்யின் சட்டையில் கரை இருப்பதன் காரணமாக சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என முடிவு செய்துள்ளார்கள்.

அதேபோல இந்த திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அரபு நபர்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் வெளிவந்தது இப்பாட்டு இந்த திரைப்படத்தில் அது சம்பந்தப்பட்ட பாடல் இருப்பது உறுதி ஆகி விட்டன. அதுமட்டுமில்லாமல் சண்டை இயக்குனரான அன்பு அறிவு ஆகிய இருவரும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்யின் சண்டைக்காட்சிகள் வேற லெவல் இருக்கும் என கூறியுள்ளார்கள்.

vijay-1
vijay-1

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் அதில் 100க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். அப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்த தளபதி விஜய் தங்களுடைய வேட்பாளர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த புகைப்படத்தில் தளபதிவிஜய் ஓரமாக அமர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் தளபதி விஜய் எளிமையாக தான் இருக்கிறார் அவருடைய மனமும் மாறவில்லை என்று கூறி வருகிறார்கள்.

vijay-2