மீண்டும் தன்னுடைய மெகாஹிட் திரைப்படத்தின் கூட்டணியில் தளபதி விஜய்..! 100 கோடிக்கு மேல் சம்பளம் தர முன் வந்த தயாரிப்பாளர்கள்..!

thuppakki-1
thuppakki-1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜய் சமீபத்தில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி இயக்குவது மட்டுமில்லாமல். நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நடிக்க போகும் திரைப்படம் இதுவாகத்தான் இருக்குமென கூறப்படுகிறது.

மேலும் இத் திரைப்படமானது தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ் மற்றும் இதர மொழிகளில் வெளியாக உள்ளதன் காரணமாக தளபதி விஜய் இந்த திரைப்படத்திற்கு சுமார் 120 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் தற்போது ரஜினிக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் ஒரு கதாநாயகன் என்றால் அது தளபதி விஜய் தான்.

இளம் தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படமானது தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் உருவாகும் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு 100 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பு நிறுவனம் தயாராக உள்ளதாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன நிலைகள் விஜய் வம்சி திரைப்படத்தை முடித்த பிறகும். லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தை முடித்த பிறகும் இந்த கூட்டணி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தயாரிப்பாளர் தாணு தளபதி விஜயின் துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஆகையால் தளபதி விஜயை வைத்து திரைப்படம் இயக்கினால் கண்டிப்பாக போட்ட பணத்தை இரண்டு மடங்காக எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான்  இப்படி பேசி உள்ளார் என அரசல் புரசலாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசிவிடுகிறார்கள்.