தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராகவும் பிரபல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் மாபெரும் ஹிட்டு கொடுத்தது.
மேலும் இத் திரைப்படமானது ஒரு ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக அமைந்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தை பல்வேறு ரசிகர் பெருமக்களும் பார்த்ததுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பலரும் சிவகார்த்திகேயனை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து ஆண் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை சிபிசக்கரவர்த்தி அவர்கள் இயக்கும் வகையில் லைகா தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வானது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் தான் நடிக்க உள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் இதுவரை போலீஸ் டாக்டர் என பல்வேறு கெட்டப்பில் நடித்து இருந்தாலும் தற்போதுதான் முதன் முதலாக காலேஜ் ஸ்டூடண்ட் ஆக நடிக்க உள்ளார்.
அந்தவகையில் இதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயன் தல அஜித்தின் ஏகன் திரைப்படத்தில் கூட காலேஜ் ஸ்டுடென்ட் ரோலில் நடித்து இருப்பார் ஆனால் இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் சக்கரவர்த்தி என கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் அவர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல். இதற்கு முன்பாகவே இந்த திரைப்படத்தின் கதையை தளபதி விஜய்க்கு சிபி சக்ரவர்த்தி காட்டியுள்ளாராம்.
அந்தவகையில் தளபதி விஜய்யும் இந்த கதையை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என்று சிபிசக்கரவர்த்தி பாராட்டி உள்ளார் என கூறப்படுகிறது.