இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள தளபதி விஜய்.! இந்த ஒரே ஒரு புகைப்படமே போதும்.

thalapathy-65
thalapathy-65

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.  இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகி பாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்போம் அதிகமாக இருந்து வருகிறது. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதே வகையில் தளபதி 65 திரைப்படத்திலும் இப்படி ஒரு பாடல் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தளபதி 65 பட சூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த ஜார்ஜியாவில் உள்ள தளபதி ரசிகர்கள் நேரில் சென்று விஜயிடம் ஆட்டோகிராப் வாங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தளபதி விஜயின் ஆட்டோகிராப் வாங்கி அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ அந்தப் புகைப்படம்.