இளைய தளபதி விஜய் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கில் பார்க்க வேண்டும் என முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களை சமீபத்தில் விஜய் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் பொங்கல் 13இல் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து 14ம் தேதி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் சிம்பு தற்போது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அந்த தகவல் என்னவென்றால் சினிமா துளிர்க்க மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப்பெரிய சக்தி தேவை. கடற்கரை கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கம் நிரம்ப வேண்டும் அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் மாஸ்டருக்கும் ஈஸ்வரனுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே.
என பதிவு செய்தது மட்டுமல்லாமல் விஜய் சிம்பு இருவரும் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகத்தை நேருக்கு நேர் பார்க்கும் போது எடுத்த புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் #Master க்கும் #Eeswaran க்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே❤ @actorvijay@SilambarasanTR_ pic.twitter.com/CWrqkTTYLf
— sureshkamatchi (@sureshkamatchi) December 30, 2020