தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணானகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிந்த நிலையில் தற்போது மீதம் 36 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
இவ்வாறு படப்பிடிப்பு முடிந்த கையோடு எடிட்டிங் வேலை மிக விறுவிறுப்பாக நடைபெற உள்ளதாக பீஸ்ட் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் அடுத்த திரைப்படத்திற்கான வேலை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதம் ஆகும் என்பதன் காரணமாக கேரளா செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.
பொதுவாக விடுமுறை தினங்களில் தன்னுடைய மாமனார் வீட்டிற்கு செல்வதுதான் வழக்கம் ஆனால் இந்த முறை கேரளாவிற்கு சென்று விட்டு வரலாம் என முடிவு செய்துள்ளாராம் மேலும் இதை கேரளா செல்வதற்கு ஆயுர்வேத மசாஜ் தான் காரணம் ஏனெனில் மசாஜ் செய்து வந்தால் மீண்டும் புதிய பொலிவுடன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம்.
பொதுவாக சிம்பு விக்ரம் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களும் கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத மசாஜ் செய்வது வழக்கம் தான் இந்த முறை தளபதி விஜய் கேரளாவிற்கு செல்வது ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பி உள்ளது.