பூஜா ஹெக்டேவுக்காக தனது கொள்கையை மாற்றிக் கொண்ட “தளபதி விஜய்”.! ஆச்சரியப்படும் சினிமா உலகம்.

vijay

விஜய் தனது நடிப்பு திறமையின் மூலம் கோடானகோடி ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளதால் இவர் நடிக்கின்ற ஒவ்வொரு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பை அவரது ரசிகர்கள் கொடுக்கின்றனர் அந்த காரணத்தினால் விஜயின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூலித்து.

விஜய் பிகில், மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா மற்றும் சென்னையில் ஷூட்டிங் வெற்றிகரமாக முடித்த நிலையில் படக்குழு ரஷ்யாவில் ஆக்சன் காட்சிகள் மற்றும் சில காட்சிகள் அங்கு படமாக  எடுக்க உள்ளது.

இதனால் அங்கு  ஷூட்டிங் பணிகளை துவக்க ரெடியாக இருக்கிறது. அங்கு ஐந்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறும் என கூறப்படுகிறது. தளபதி விஜய் திரைப்படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார் இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மாட்டார்.

அதை கொள்கையாக வைத்து இருந்த விஜய் தற்போது  பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே அவர்களுக்காக அந்த வழக்கத்தை மாற்றி உள்ளாராம் காரணம் பூஜா ஹெக்டே  பீஸ்ட் திரைப்படத்தையும் தாண்டி பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் அவருக்கு சரியான நேரம் கிடைக்காமல் போகிறது அதனால் கிடைக்கின்ற நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த நேரங்களில் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார் அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையும் பூஜா ஹெக்டே திரைப்படத்தில் கலந்து கொள்வதால் அந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக படக்குழு ஷூட்டிங்கை எடுக்கிறது அதற்காக விஜய்யும் ஒத்துழைத்து நடிக்கிறாராம். நடிகை பூஜா ஹெக்டே காக இவ்வாறு விஜய் செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம்.

pooja hegde
pooja hegde