தூக்கி விட்ட இயக்குனருக்கு பட வாய்ப்பு கொடுக்க மறுத்த தளபதி – நன்றியை மறந்த விஜய்.!

vijay
v

தளபதி விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 66வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதால் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.

படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் கூட சமூக வலைதளப் பக்கங்களில் கசிந்து வைரல் ஆகியது இதனைத்தொடர்ந்து அன்மையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகியது அதன்படி படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது

மேலும் மூன்று போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரென்ட் ஆகியது. இந்த படத்தைத் தொடர்ந்து அதுக்குள்ளேயே அடுத்த படத்தில் இயக்குனர் லோகேஷ் உடன் கமிட் ஆகவும் ஒப்புக்கொண்டார் விஜய். இப்படி அடுத்தடுத்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விஜயை வைத்து படம் எடுக்க போட்டி போட்டு வருகின்றனர்.

நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு தற்போது விஜய்க்காக ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளாராம். அந்த கதையை விஜய்யிடம் கூறி உள்ளார் விஜய் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த கதை இப்போதைக்கு வேண்டாம் என மறுத்துள்ளார்

மேலும் ரசிகர்கள் இப்பொழுது ஆக்சன் திரைப்படங்களை அதிகம் விரும்புவதில்லை என்பதால் சில நாட்கள் செல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என கூறியுள்ளாராம். இருந்தாலும் விஜய்க்காக ஒரு சூப்பர் கதையை உருவாக்கி அதில் நடிக்க விஜயை நடிக்க வைக்க பேரரசு மும்முரமாக இருந்து வருகிறார்.