தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தன்னுடைய நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார் அந்த வகையில் இந்த பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள்.
மேலும் தளபதி விஜயின் இந்த பிறந்தநாள்க்கு பல்வேறு திரைபிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வரும் நிலையில் இவர் சமீபத்தில் நடித்துவரும் பாரிஸ் திரைப்படத்தின் போஸ்டர் கூட இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல் போஸ்டர் வெளியாகியது நிலையில் இந்த திரைப்படத்தின் 2வது போஸ்டரும் தளபதி பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய தாயார் அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசிய பொழுது கூறிய விஷயங்கள் என்னவென்றால் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவது சுத்தமாக பிடிக்காதாம். அந்தவகையில் விஜய் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை பத்து வயதுவரை கேக் வெட்டி கொண்டாடி உள்ளாராம்.
ஆனால் அவருடைய தங்கை மறைவிற்குப் பிறகு ஆக தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதை முற்றிலுமாக தவிர்த்தது மட்டுமில்லாமல் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதே கிடையாது என தளபதி விஜய்யின் அம்மா அவர்கள் கூறி உள்ளார்.
எது எப்படியோ நீங்கள் கொண்டாடாமல் இருந்தாலும் சரி நாங்கள் விடமாட்டோம் என தளபதி ரசிகர்கள் என் பிறந்தநாளை கொண்டாடுவதில் மட்டும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.