விவேக்கின் கனவு ஆசையை நிறைவேற்ற சபதம் எடுக்கும் தளபதி ரசிகர்கள்.!

vivek
vivek

தமிழ் சினிமாவில் சிரிப்பில் சந்திக்க  வைத்த நடிகர் விவேக் எதிர்பாராத விதமாக நேற்று உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் சினிமாவையும் தாண்டி சமூகத்தின் மீது அக்கறை உடையவர்.  அந்த வகையில் மரக்கன்று நடுவதற்கான பலரை ஊக்குவித்தும் தன்னால் முடிந்த வரை மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.

அப்துல்கலாம் நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர் ஆவார். அந்தவகையில் நடிகர் விவேக்கும் அப்துல்கலாமின் நினைவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக  ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள்ளேயே காலமாகிவிட்டார்.  அந்த வகையில் விவேக் தற்பொழுது வரையிலும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.  இந்நிலையில் இவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக நாங்கள் நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றுவோம்  அந்த வகையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவோம் என்று சபதம் எடுத்துள்ளார்கள்.