தளபதி 66 : படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போவது யார்.? அவரே பேட்டியில் மகிழ்ச்சியுடன் சொன்னது.! வெளியான தகவல்.

vijay
vijay

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது 65வது திரைப்படமான பீஸ்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை விறுவிறுப்பாக நெல்சன் திலீப்குமார் எடுத்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா, சென்னை, டில்லி ஆகிய இடங்களில் முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரஷ்யா செல்ல இருக்கிறது.

இந்த படத்தை முடித்தவுடன் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் சிங்குடன் இணைந்து தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் வெகு விரைவிலேயே தொடங்க இருக்கிறது. மேலும் படக்குழுவும் தற்போது இந்த படத்தின் கதைக்கு தேவையான நடிகர் நடிகைகளை ஒவ்வொருவராக தட்டி தூக்கி வருகிறது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகர் ஒருவரை தான் தற்பொழுது தேர்ந்தெடுத்து உள்ளது. அந்த பிரபலம் வேறு யாருமல்ல பிரகாஷ்ராஜ் தான்.

நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் விஜய் படத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாக கூறி உள்ளார்.  அதன்படி பார்த்தால் நிச்சயம் தளபதி 66 திரைப்படத்தில் விஜயுடன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யும் பிரகாஷ்ராஜும் ஏற்கனவே பல படங்களில் இணைத்துள்ளனர்.

அந்தவகையில் கில்லி, போக்கிரி, சிவகாசி போன்ற திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளதால் இந்த திரைப்படமும் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்.