தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் தற்போது நெல்சன் குமாருடன் இணைந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் சூட்டிங் வெளிநாடு மற்றும் இந்தியாவில் சுற்று எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் ஷூட்டிங் நடந்து முடிந்தது அதைத்தொடர்ந்து விஜய் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது இந்த திரைப்படம் பொங்கலுக்கு வராமல் அதிலிருந்து பின்வாங்கி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ என்பவர் தயாரிக்க இருக்கிறார். தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று சொன்னது படக்குழு.
தளபதி 66 படக்குழு தற்போது தீவிரமாக பல்வேறு நடிகர் நடிகைகளை கதைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று பெயர் தெரியவில்லை.
தெலுங்கு தற்போது பிஸியான நாயகனாக நானி இருந்து வருகிறார். ஆனால் அவர் திடீரென வில்லனாக நடிப்பதற்கு ஓகே சொல்வாரா என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக இருக்கிறது. விஜய்யும் நானியும் ஒரே படத்தில் கமிட் ஆனால் அந்த திரைப்படமும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என ரசிகர்கள் கருத்தாக இருக்கிறது.