தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் வலம் வருபவர்கள் தான் நடிகர் கமல் மற்றும் ரஜினி காந்த் இவர்களை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருபவர் தான் தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் அந்தளவிற்கு தளபதி விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தளபதி விஜய் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டார் இதனை தொடர்ந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை மிக விறுவிறுப்பாக படக்குழுவினர்கள் எடுத்து கொண்டு வருகிறார்கள். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படைப்பானது சில வாரங்களில் முடிவடையும் என படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலையை மிக விறுவிறுப்பாக செய்து வருகிறார். அந்தவகையில் தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை வம்சி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே தமிழில் கார்த்திக் மற்றும் நாகார்ஜுனா வைத்து தோழா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு சினிமாவில் மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் இயக்கப் போகும் திரைப்படத்தை தில் ராஜு அவர்கள் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் இணைந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து உள்ளதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிலையில் அது உண்மை இல்லை என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
மேலும் இந்த திரைப்படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய நமது இயக்குனர் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு சிறிய ஐடியா மட்டும்தான் நான் தளபதியிடம் கூறினேன் ஆனால் அவருக்கு அது மிகவும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டார் அதுமட்டுமில்லாமல் மனித உறவுகளின் மகத்துவம் எமோஷனல் எல்லாமே என்னுடைய திரைப்படத்தில் கண்டிப்பாக இருக்கும் அந்தவகையில் தளபதி 66வது திரைப்படத்திலும் இதனை எதிர்பார்க்கலாம் என இயக்குனர் வம்சி கூறியுள்ளார்.