தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைந்து வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி திரைப்படம் உலகளவில் திரையரங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான அனிருத் இசையில் வெளிவந்த அரபி குத்து பாடல் ரசிகர்களிடையே செம வைரல் ஆகி வருகின்றன. மேலும் தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம்.
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது உருவாகி வரும் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் பெருமளவு எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய்யின் 66வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ள இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். மேலும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக நடிக்க பல நடிகைகள் முன் வந்த நிலையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனாவை விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் கமிட் செய்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய். நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் அஜித்தின் விவேகம் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளார்.