தளபதி 65 பூஜையில் கெத்தாக கலந்து கொண்ட விஜய்.! செம ஸ்டைலிஷா இருக்காரு வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது அதுமட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். அந்தவகையில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா மற்றும்  பிக் பாஸ் கவின் ஆகியோர்களும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் தளபதி விஜய் மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.

தளபதி விஜய் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும் ஹீரோயின் பூஜையில் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பூஜையில் தளபதிவிஜய் பரட்டைத் தலையுடன் வித்தியாசமான லுக்கில் உள்ளார்.

அந்த வகையில் பூஜையின் போது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தளபதி விஜய் மற்றவர்களுடன் சிரித்து பேசி கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்  லைக்குகளையும், தளபதி விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.