வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையும் பல என்டர்டைன்மென்ட் ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து மக்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்தவகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் தனது நிஜ கணவன் மனைவியுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு இடையே உள்ள புரிதல் மற்றும் காதல் போன்றவற்றை வைத்து இந்த நிகழ்ச்சியை எடுத்து வருகின்றனர். இதனைக் கடந்த மூன்று சீசன் களாக நீயா நானா கோபிநாத் மற்றும் திவ்யதர்ஷினி இருவரும் ஜட்ஜாக இருந்து வருகின்ற நிலையில்
மாகாபா மற்றும் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர் தற்போது வரை மிஸ்டர் அண்ட் மிஸஸ் மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விரைவில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நான்காவது சீசன் தொடங்க உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரமும் வெளிவந்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் ரேகா, நடிகை பரீனா, நடிகை துர்கா, நடிகர் யோகி மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் திலீபன் ஆகியவர்கள் அவர்களது துணை களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.