அஜித் பட நடிகையுடன் ஜோடி போட போகும் காமெடி யோகி பாபு.! அதிர்ச்சியில் டாப் நடிகர்கள்.

yogi babu
yogi babu

சினிமாவுலகில் எப்படி நடிகர் நடிகைகள் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து  தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பிடித்த பிறகு நீண்ட தூரம் சினிமாவில் பயணிக்கின்றனரோ அதுபோல காமெடியன்களும் தற்போது நல்லதொரு இடத்தைப் பிடித்து வலம் வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகர் யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக மாறி உள்ளார்.

ஏனென்றால் வருடத்திற்கு குறைந்தது 30 அல்லது 40 படங்களில் நடிக்கிறார் அந்த திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் அடிப்பதோடு இவரது காமெடி ரசிக்கும் படியும் இருப்பதால் புகழின் உச்சத்தில் இருக்கிறார். காமெடி நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி இவர் அப்பொழுது சில முக்கிய கதாபாத்திரங்கள், சோலோ ஹீரோவாகவும் நடித்து அசத்துகிறார்.

அந்தப் படங்களின் வெற்றியை பெற்றுத் தருவதால் உச்ச நட்சத்திரமாக தற்போது தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் கூட சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தில் தனது சிறந்த காமெடியை வெளிப்படுத்தியிருப்பார் அதன் பின் தற்போது வலிமை படத்தில் அஜித்துடன் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் இப்படி ஓடி கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதுமுக இயக்குனர் முருகேச பூபதி இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட நாயகன் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் குறித்து ஒரு படம் உருவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது இந்த படத்தில் யோகி பாபு ஹீரோவாகவும், நாயகியாக லட்சுமி மேனனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

lakshmi menon
lakshmi menon

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த லட்சுமிமேனன் படிப்பை மேற்கொண்டு மீண்டும் திரும்பி சினிமாவில் நடிக்க வந்துள்ளார் தற்போது வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதால் யோகிபாபு கைகோர்க்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகரை பார்க்காமல் கதையை பார்ப்பதால் லட்சுமிமேனன் எந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது