விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு கலக்கப்போவதுயாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் புகழ். பின்பு விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி முதல் சீசனில் கோமாளியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு புகழுக்கு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது காமெடியை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமான புகழ் தொடர்ந்து குக் வித் கோமாளி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புகழுக்கு திரைப்பட வாய்ப்புகள் சில வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை, சந்தானத்துடன் சபாபதி போன்ற பல திரைப்படங்களில் தற்போது காமெடியனாக பணியாற்றி உள்ளார்.
மேலும் சமீபத்தில் வந்த தகவலின் படி புகழ் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதனிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் நான் பென்சி என்ற ஒரு பெண்ணை ஐந்து வருடமாக காதலித்து வருகிறேன் என அவர் கூறியிருந்தார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் அவரது காதலி புகைப்படத்தை வெளியிட்டு அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவரது வருங்கால மனைவி பென்சி உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பிரபல டயலாக் ஒன்றிற்கு இருவரும் இணைந்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் கமெண்டுகளையும் பெற்று வருகின்றன. இதோ அந்த அழகிய வீடியோ.