சிம்புவை எதிர்த்து முதல் முறையாக மோதும் காமெடி ஹீரோ.! “பத்து தல” படத்திற்கு வந்த புதிய சிக்கல்

simbu
simbu

நடிகர் சிம்பு தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பத்திலிருந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்களை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க ஜில்லுனு ஒரு படத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர் கிருஷ்ணாவுடன்..

சிம்பு கூட்டணி அமைத்து பத்து தல படத்தில் நடித்துள்ளார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவகி இருக்கிறது படத்தில் அவருடன் இணைந்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கலையரசன், joe malloori, teejay arunasalam மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ ஸ்கீரின் நிறுவனம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் படத்தை தயாரித்து இருக்கிறது ஒரு வழியாக பத்து தல படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதே தேதியில் சிம்புவின் பத்து தல திரைப்படத்தை எதிர்த்து சூரி முதன் முதலாக ஹீரோவாக நடித்த விடுதலை திரைப்படமும் மார்ச் 30ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது.

இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் மோதுகிறது. சிம்பு சூரி படம் தான் என அசால்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார், சூரிக்கு பக்கபலமாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மேலும் இந்த படம் ஒரு மலைவாழ் மக்களைப் பற்றி சொல்லும் ஒரு படம் என்பதால் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே இந்த மார்ச் 30 ஆம் தேதி யார் படம் ஓங்கும் என்பதில் பெரிய சிக்கலில் இருக்கிறது. பத்து தல திரைப்படத்தை விட விடுதலை திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தான் உச்சத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.