விஜய் டிவியால் அவதிக்கு உள்ளாகிய காமெடி நடிகர்கள்.! இது என்னடா புதிய சோதனை

comedy-actor
comedy-actor

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களான விவேக், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்டவரின் காமெடிக்கு இன்று வரையிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் இவர்களுடைய காமெடி இன்று வரையிலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்த வகையில் இவர்களோடு சேர்ந்து பல துணை நகைச்சுவை நடிகர்களும் நடிப்பார்கள்.

அப்படி முன்னணி காமெடி நடிகர்களுடன் துணை காமெடி நடிகர்களாக நடித்த சிங்கமுத்து, போண்டாமணி, செல்வமணி, உள்ளிட்ட பலரையும் சொல்லலாம். இந்த நிலையில் சமீப காலங்களாக சினிமாவில் விஜய் டிவி மற்றும் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர்கள் ஈசியாக சினிமாவில் வந்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த புகழ் மற்றும் பாலா இருவரும் தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதேபோல காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்த ராமர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் youtube சேனல் மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மற்றும் துணை நடிகராகவும் அறிமுகம் ஆகி நடித்து வருகின்றனர். இதனாலேயே வடிவேலு விவேக் உடன் துணை காமெடி நடிகர்களாக நடித்த பல நடிகர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

மேலும் துணை நகைச்சுவை நடிகர்களாக நடித்த நடிகர்களுக்கு தற்போது வாய்ப்பு எதுவும் இல்லாமலும் சாப்பிடுவதற்கு கூட எதுவும் இல்லாமலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து நடிகர் சங்கமும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை இந்த பிரச்சனையை தீர்க்காமல் அவர்களும் துணை நகைச்சுவை நடிகர்களை  உதறித் தள்ளுகின்றனர்.

அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்த நெல்லை சிவா சினிமாவே கதி என்ற நிலையில் இருந்தார் ஆனால் அவர் இறக்கும்போதே கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் இறந்தது எங்களுக்கும் மிகவும் சோகம் அளிக்கிறது என்று கூறி வருகின்றனர். விஜய் டிவி மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமடைந்த சிலரால் தங்களுக்கு வேலைவாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்டது எனது வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.