சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரை பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இருந்தாலும் இவர் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் சுமாரான வெற்றியை தான் பதிவு செய்துள்ளதால் பலரும் இவருடைய மார்க்கெட் விழுந்ததாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ஜெயிலர் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது படத்தில் ரஜினி உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு..
மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் இறுதி கட்டப்பட பிடிப்பு கொச்சின் மற்றும் பல முக்கிய இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக டப்பிங் பணிகளை நோக்கி நகரும் என தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் திரைப்படம்..
குறித்து ஒரு மாஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார். யோகி பாபு அவர் சொன்னது.. தர்பார் படத்தில் ஓரளவு ஒட்டி இருந்தோம்.. ஜெயிலர் படத்தில் ஃபுல்லாவாகவே ஒட்டி இருக்கிறோம்.. ஜெயிலர் படத்தில் காமெடி வேற லெவலில் இருக்கும் என கூறினார் மேலும் பேசிய யோகி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுப்பார்..
அப்படித் தான் இந்த படத்தில் தனக்கு நல்ல சுதந்திரம் கொடுத்திருந்தார் என கூறினார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் சொல்வது போல இந்த படத்தில் ஆக்சன் காமெடி என அனைத்தும் மிரட்டும் நிச்சயமாக ஜெயிலர் படம் ஹிட் அடிப்பது உறுதியாக கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.