சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளிலும் படம் வெளியிடப்பட்டது தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளை கைப்பற்றியது போல வெளிநாட்டிலும் அதையே செய்து அசத்தி உள்ளது.
சுமார் 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைத்தது. மேலும் படம் வெளியாவதற்கு முன்பே நிறைய சாதனைகள் செய்து வந்தது தற்பொழுது பழைய சாதனைகளை அடித்து நொறுக்கியது அடுத்தடுத்த புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் முதல் நாள் மட்டுமே சுமார் 70 கோடியை அள்ளிய நிலையில் இரண்டாவது நாளிலேயே 100 கோடியை தாண்டிவிட்டது அண்ணாத்த படம்.
போதாதற்கு டிக்கெட் புக்கிங்கிலும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது இதுவரை ஒரு மில்லியன் டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இப்படி அடுத்தடுத்து சிறப்பான சம்பவத்தை ரஜினியின் அண்ணாத்த செய்து வருகிறது. படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படம் என்பதால் ரசிகர்கள் பெருமளவு கவரவில்லை இதனால் கலவையான விமர்சனத்தை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் வசூலில் மட்டும் பின்னி பெடலெடுத்து கொண்டிருக்கிறது இது ஒரு பக்கமிருக்க இந்தத் திரைப்படத்தை பல பிரபலங்கள் பார்த்து விட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துக்களையும் கூறி வருகின்றனர். அண்மையில் கூட நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், கவின் போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் படத்தைப் பார்த்து கொண்டாடிய நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் காமெடி நடிகர் யோகி பாபு தற்போது இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது : படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட் படமாக அமைந்துள்ளது மேலும் படம் சென்டிமென்டாக அமைந்துள்ளதால் சிறப்பாக இருக்கிறது என அவர் கூறி உள்ளார் மேலும் தலைவர் ராக்ஸ் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் அந்த படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு தற்பொழுது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.