சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி திரை உலகில் பின்னணி பாடகராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டு வருகிறார். முதலில் பின்னணி பாடகராக ஒன்று, இரண்டு படங்களில் பாடிய இவர் ஒரு கட்டத்தில் தனுஷின் 3 திரைப்படத்தை இயக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததை எடுத்து அடுத்து இளம் நடிகர் கௌதம் கார்த்தி, விவேக்கை வைத்து வை ராஜா வை என்னும் காமெடி படத்தை கொடுத்தார் இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்கள் பிறகு..
இப்பொழுது தான் “லால் சலாம்” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினியும் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக ஏழு நாள் கால் சீட் கொடுக்க இருக்கிறாராம்..
மேலும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சுமார் 25 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்த நிலையில் உருவாகி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் செஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தற்பொழுது காமெடி நடிகர் செந்திலும் இணைந்துள்ளார்.. செஞ்சியில் விஷ்ணு விஷால் மற்றும் செந்திலுக்கான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களை போலவே அடுத்தடுத்த நடிகர் நடிகைகள் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.