ஒரே வருடத்தில் 50 திரைப்படங்களில் நடித்து மிரட்டிய பிரபலம்.! சாதனையை முறியடிக்க முடியாமல் திணறும் நடிகர்கள்…

comedians
comedians

தற்பொழுது உள்ள காமெடி நடிகர்களை விட அந்தக் காலத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் நடிகைகள் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் டி எஸ் பாலையா, சந்திரபாபு,என் எஸ் கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு மற்றும் பெண்களில் மனோரம்மா போன்றவர்கள் நகைச்சுவை நடிகர்களாக இவர்கள் நடித்த காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள்.

இவர்களுக்கெல்லாம் போட்டியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் சுருளிராஜன். இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் அடுத்தடுத்த ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு குவிந்து வந்தது.  இதன் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் சுருளிராஜன்.

இவரின் நடிப்பு திறமை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் இவர் எந்த வேடத்தில் நடிக்க சொன்னாலும் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் சிறப்பாக நடிப்பார் அதுமட்டுமல்லாமல் இவரின் குரல் கணீரென்று காமெடிக்கு தகுந்தார்போல் இருந்ததால் பல காமெடி நடிகர்களுக்கு போட்டியாக திகழ்ந்தார்.

அந்த வகையில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் சினிமாவின் பக்கபலம் என்று கூட இவரை சொல்லலாம். இவர் நடித்த காலகட்டத்தில் இவருக்கு போட்டியாக இருந்தவர்களை தாண்டியும் கவுண்டமணி, செந்தில் வடிவேலு மற்றும் விவேக் போன்ற அடுத்த தலைமுறை காமெடி நடிகர்களுக்கும் சுருளிராஜன் போட்டியாக திகழ்ந்தார்.

இவரை இன்று வரையிலும் பலர் பாராட்டி வருகிறார்கள்.ஏனென்றால் இவர் ஒரு வருடத்தில் 50 படங்களில் நடித்து சாதனை புரிந்தார்.அந்தவகையில்  தற்பொழுது உள்ள காமெடி நடிகர்கள் கூட இவரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. அன்றைய காலகட்டத்திலேயே இவர் ஒரு வருடத்தில் 50 திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது இவர் காமெடி நடிகராக நடித்து இருந்தால் சொல்லவே தேவை இல்லை இவர் தான் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பார்.

suralairajan-a
suralairajan-a