தனது பாணியில் தொகுப்பாளினி மற்றும் நடிகையை கலாய்த்த வடிவேலு.! கலக்கலான வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த ஏராளமானோர் ஹீரோக்களாக நடித்து கலக்கி வருபவர்கள் இருக்கிறார்கள். காமெடி நடிகர்களாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ஹீரோக்களாக நடித்து வருபவர்களின் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் முக்கியமாக அப்படிப்பட்டவர்களின் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால் தியேட்டருக்கு சென்று குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படங்களாக அமைகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இது ஒரு பக்கம் ஆதரிக்க பட்டாலும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள் என்ற அச்சமும் இருந்து வருகிறது. அந்த வகையில் தனது சிறந்த காமெடி திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டு சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் வடிவேலு.

இவர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்ததோடு மட்டுமல்லாமல் பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் கலக்கி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவர் செய்த சிறு சிறு தவறினால் சமீப காலங்களாக திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார். அந்த வகையில் கடைசியாக விஜயுடன் இணைந்து மெர்சல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த வடிவேலுவுக்கு தற்போது தான் தரமான திரைப்படமொன்றில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது பிரபல இயக்குனரான சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் காரணமாக ஏராளமான திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வடிவேலுவை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளராக அறிமுகமாகி சமீபத்தில் நடிகையாக நடித்து கலக்கி வரும் அகல்யா வெங்கடேசன் வடிவேலுவை நேரில் சந்தித்து உள்ளார். அவ்வபொழுது அகல்யா வடிவேலிடம் என் பெயரை ஒரு முறை கூறுங்கள் என்று கேட்டதற்கு வடிவேலு தனது ஸ்டைலில் அகல்யா வெங்கடேசன் பெயரை கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.