காமெடி நடிகர் சூரி வீட்டில் நடந்த திருமணம்.! பல லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு.? வெளியான அதிர்ச்சி தகவல்.

soori-
soori-

ஒருவரின் வாழ்க்கை எப்பொழுது வேண்டுமானாலும் மாறும் அந்த வகையில் பரோட்டா  மூலம் தனது தலையெழுத்தையே மாற்றி கொண்டவர் சூரி. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஒரு மூலையில் படத்தின் காட்சிகளில் வந்து போனாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா அடித்து நொறுக்கி சாப்பிடும் காமெடி கொண்டாடினர்.

மேலும் வேற லெவலில் ரிச்சாகியதை தொடர்ந்து இவரது பெயர் பட்டிதொட்டியெங்கும் சென்றது மேலும் பட வாய்ப்புகள் குவிந்தன. ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் கைகோர்த்து வந்தாலும் போகப்போக டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய நூலிலும் மற்றும் காமெடியிலும் பின்னி பெடல் எடுக்கிறார்.

வெற்றிகளைக் குவித்து வந்த இவர் இப்போது ஹீரோவாகவும் என்ட்ரி ஆக உள்ளதால் இவருக்கான வரவேற்பு தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறது மேலும் இதன் மூலம் தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளார். இவர் வெற்றிமாறன் உடன் கை கோர்த்து விடுதலை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்திற்காக நடிகர் சூரி கதைக்கு ஏற்றவாறு தனது உடலமைப்பை மாற்றி கொண்டு செம க்யூட்டாக இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சூரியின் அண்ணன் மகள் கல்யாணம் மதுரையில் கோலாகலமாக நடந்தது. கல்யாணத்திற்காக சூரி தனது நண்பர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், புகழ், தங்கதுரை போன்ற பல சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றனர். ஆனால் அப்பொழுது ஒரு மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி உள்ளது அந்த திருமணத்தின் பொழுது இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போய் உள்ளன என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.