Actor vadivelu: தமிழ் சினிமாவின் காமெடி ஜாமாவான இருந்து வரும் நடிகர் வடிவேலு குறித்து நடிகர் சுகுமார் தெரிவித்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வடிவேலு தொடர்ந்து ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. வடிவேல் உடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் என பலரும் இவர் குறித்த பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் பிறகு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் செய்த சில தவறுகளினால் சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. அப்படி நடிகர் சங்கம் ரெட் கார்டு கொடுக்கும் அளவிற்கு சென்ற நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியில் வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் இந்த படம் தோல்வியினை சந்தித்தது.
இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய கேரக்டர் பாராட்டப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக இவருடன் நடித்த ஏராளமான பிரபலங்கள் இவரை குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது நடிகர் சுகுமார் மீண்டும் வடிவேலு குறித்து அதிர்ச்சி க்குரிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது, சுகுமார் கூறுகையில் ஒருமுறை வடிவேலுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது அப்பொழுது போண்டாமணியும், முத்துக்காளையும் வந்து என்னிடம் உங்களை வடிவேலு பார்க்க விரும்புவதாக சொன்னார்கள் நான் உடனே மகிழ்ச்சியாகி அடடா நம் குருநாதரை பார்க்கப் போகிறோமே என்ற ஆவலோடு பொக்கே எல்லாம் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன்.
மருத்துவமனைக்கு சென்ற நான் அண்ணே வணக்கம் குரு இல்லாம வித்தை கத்துக்கிட்ட மாதிரி அண்ணனே என்றேன் உடனே அவர் ஆமாயா என் வயித்துல பிறந்தவன் மாதிரியே நீ இருக்கன்னு என் ஆத்தா சொல்லுவியா என்ன சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் போண்டாமணி, முத்துக்காளையை வெளியே அனுப்பி விட்டார். அதற்குப் பிறகு நீ பல கம்பெனில போய் என்ன மாதிரி நடிப்பேன்னு சொல்லி இருக்கியாமே என கேட்க அதற்கு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பின்னாடி இருந்து ஒருவர் என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுற என்று சொல்லி கீழே தள்ளிவிட்டார் அதுக்கப்புறம் நல்லாவே அடி விழுந்தது.
நான் இனி இப்படி பண்ணவே மாட்டேன் அண்ணே ஊரை விட்டு ஓடி போய்டுறேன் என கூறிவிட்டு வீட்டிற்கு ஒரு வழியாக வந்துட்டேன் நான் வீட்டுக்கு வந்ததும் என் முகம் வீங்கி இருந்ததையும் சட்டை கிழிந்திருப்பதையும் பார்த்த மனைவி என்ன ஆச்சு என கேட்க நான் வண்டியில் இருந்து கீழே விழுந்துட்டேன் எனக்கூறி சமாளித்து விட்டேன் என இன்னும் ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.