comedy actor srinivasan granddaughter who act as a heroine in surya movie,her photos:காமெடி நடிகர் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது செந்தில், கவுண்டமணி, வடிவேலு தான். ஆனால் 1970-80 களில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்தவர் தேங்காய் சீனிவாசன். இவர் கல்மணம் எனும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் சீனிவாசன் என்று பரவலாக அழைக்கப்பட்டு வந்தார்.
இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திரவேடத்திலும் நடித்து பிரபலம் அடைந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே.தேங்காய் சீனிவாசனின் மகன் வழி பேத்தியான சுருத்திகா 2002இல் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் எந்த படத்தில் நடிக்க அறிமுகமான போது இவருக்கு 14 வயசு தான் ஆனது.
மேலும் இதனைத்தொடர்ந்து அவர் ஆல்பம், தித்திக்குதே, நளதமயந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படமான சுப்பனம் கொண்டு துலாபாரம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனைத்தொடர்ந்து படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியல் நடிப்பு சம்பந்தமான படிப்பினை படித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தற்போதும் வாய்ப்புகள் தேடி வருகிறார். மேலும் தற்போது இவருக்கு வயது 34 என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.