காமெடி நடிகர் செந்திலின் முழு சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா.? வியப்பில் ரசிகர்கள்

senthil
senthil

90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருப்பவர் செந்தில் இவரது காமெடி தனித்துவமாக இருந்தாலும் காமெடி நடிகர் கவுண்டமணியுடன் இவர் சேரும்.

போது அந்த காமெடி இன்னும் வேற லெவலில் இருக்கும் அதனால் இவர்களது காம்போ எப்போதுமே நல்ல காமெடியை கொடுத்துள்ளது. மக்கள் மற்றும் ரசிகர் பெரிதும் பார்த்து ரசித்தனர். பல படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்து உள்ளனர்.

90 காலகட்டம் செந்திலுக்கு பொற்காலமாக இருந்தது காரணம் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார் மேலும் டாப் ஜாம்பவான்களான ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார், சத்யராஜ், பிரபு என அனைவரது படங்களிலும் இவர் இணைந்து நடித்து உள்ளார்.

காலங்கள் போக போக ஒரு கட்டத்தில் இவர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் இருப்பினும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா இவருக்கு வாய்ப்புகளை கொடுத்து உள்ளது அந்த வகையில் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார் அதனை தொடர்ந்து செந்தில் ஹீரோவாக தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா தான் அடுத்து இயக்க உள்ளார் இந்த நிலையில் நடிகர் செந்திலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதன்படி பார்க்கையில் காமெடி நடிகர் செந்திலின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 50 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றன.